Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 17 டிசம்பர் (ஹி.ச.)
நீலகிரி மற்றும் ஊட்டியின் இதமான காலநிலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கண்டு ரசிக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.
குறிப்பாக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றிப் பார்ப்பார்கள். புல்வெளி மைதானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடுவர். மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்து, சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.
இந்த நிலையில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.
வனப்பகுதிகளுக்குள் வீடியோ எடுக்கவும், டிரோன் பறக்கவிடவும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். hidden spots என்ற குறி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதைபோல் பாதுகாப்பு இல்லாத வனப்பகுதி என்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் நீலகிரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்தனர்.
குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என வனத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b