Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக அன்புமணி தரப்பில் ஆர்ப்பாட்டம் இன்று (டிசம்பர் 17) காலை 11.45 மணியளவில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கியது. அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள பாமக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, தவெக கட்சிகள் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
அதே சமயம் பாஜக சார்பில் கரு நாகராஜன் கலந்துகொண்டார். புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அமமுக சார்பில் செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாமக இளைஞரணி துணைச் செயலாளர் முருகன், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியவாறு மேடைக்கு பின்புறம் சென்று திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விரைந்து செயல்பட்ட கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு அவரை தடுத்து, வாட்டர் பாட்டில்களில் இருந்த தண்ணீரை அவர்மீது ஊற்றி சமாதானப்படுத்தினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறையினரிடம் அன்புமணி வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b