Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 17 டிசம்பர் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ள நிலையில், அதற்காக செங்கோட்டையன் அவரது தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டங்களுக்கு காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான கேள்விக்கு திமுக இளைஞர் அணி கூட்டம் நடத்தும் பொழுது இவ்வளவு விதிமுறைகள் விதிக்கப்பட்டதா இல்லையா என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் தமிழக வெற்றிக்கழகம் நடத்தும் கூட்டத்திற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் 50க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் போலிசார் எவ்வளவு தடுக்க முடியுமோ அவ்வளவு தடுக்க முயல்கிறார்கள் அதனையும் தாண்டி தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாளை நடைபெறக்கூடிய கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் யாராவது இணைகிறார்களா? என்ற கேள்விக்கு,
அது நடக்கும்போது தெரியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என பதிலளித்தார்.
காவல்துறை முறையாக அவர்கள் பணியை செய்ய வேண்டும் எனவும் போதிய அடிப்படையில் காவலர்கள் அந்த கூட்டத்திற்கு வருகை புரிந்து அவர்களது பணியை செய்ய வேண்டும் என தெரிவித்த அவர் சட்டம் ஒழுங்கு என்பதுதான் அரசாங்கத்தின் முதல் கடமை காவல்துறையின் பிரதான பொறுப்பே அதுதான் எனவே காவல் துறையினர் அவர்களது பொறுப்பை செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனக் கூறினார்.
விஜய் நாளை ஈரோட்டிற்கு சாலை மார்க்கமாக வருகிறாரா அல்லது விமானம் மூலம் வருகிறாரா என்பது நாளைக்கு தான் தெரியும் என தெரிவித்தார்.
மேலும் ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில் க்யூ ஆர் கோடு இருக்காது என்று செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்துவிட்டார் என்றும் விருப்பமுள்ள அனைத்து பொதுமக்கள் வந்து பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிலைபாடு என்ன என்ற கேள்விக்கு,
தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருவதாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு இருந்து வருகிறது என்றும் மதுரையில் சித்திரை திருவிழா அன்று கூட அழகர் ஊர்வலம் வரும் பொழுது இஸ்லாமிய சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள் என்றும் சபரிமலையிலும்கூட பக்தர்கள் பாபர் மசூதிக்கு சென்று வருகிறார்கள் என்றும் எனவே தமிழ்நாடு மக்களும் திருப்பரங்குன்றம் மக்களும் ஒற்றுமையாக தான் உள்ளார்கள் என்றார். மேலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் ஆதாயம் தேட விரும்புவதாக தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் தமிழக காவல்துறையினர் நினைத்திருந்தால் அதனை தடுத்திருக்கலாம் என்றும் தேவையில்லாமல் நேரம் கடத்தி கூட்டத்தை கூட விட்டு பதட்டமான சூழ்நிலை உருவாக்கி விட்டனர் என தெரிவித்தார். அனைத்து சாதியும் அனைத்து மதமும் என அனைவருக்கும் ஆன இயக்கமாக தமிழக வெற்றி கழகம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
திமுக மாநாடு நடத்தும் பொழுது பிரியாணி கடையில் பிரச்சினை செய்கிறார்கள், பெண் காவலர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள அது போன்று ஏதேனும் ஒரு சம்பவம் தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை நிகழ்ந்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர் தலைவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முன்னாள் வருகிறார்களே தவிர சட்டத்தை மீறி எதுவும் செய்யவில்லை பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்று எந்த ஒரு எண்ணமும் தமிழக வெற்றி கழகத்திற்கு கிடையாது என தெரிவித்தார்.
விஜய் பற்றி அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
விஜய் கூறிய டயலாக் அண்ணாமலைக்கு நன்கு பொருந்தும் என்று தெரிவித்து அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார் என்று கூறினார்.
புதுச்சேரி காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர்களை பார்த்து தமிழக காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்திலும் சிறந்த காவலர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்களா என்பது தான் கேள்வியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
விஜய் தற்பொழுது வரை செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை என்ற கேள்விக்கு,
தற்பொழுது வரை ஆட்சியாளர்களும் முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை என தெரிவித்தார்.
கூட்டணிக்கு யாராவது பேசுகிறார்களா என்ற கேள்விக்கு,
கூட்டணி தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது அதை விஜய் பார்த்துக் கொள்வார் என தெரிவித்தார்.
விஜய்க்கு மக்களை சந்திக்க அதிக விருப்பம் உள்ளது ஆனால் பாதுகாப்பு காரணம் மட்டும் தான் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்றும் காவல்துறையும் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் அரசும் காவல்துறைக்கு போதிய சுதந்திரத்தை அளிப்பதில்லை என தெரிவித்தார். மேலும் விஜய் எடுத்த வீடியோக்கள ஜனநாயகன்படத்திற்காக எடுத்துக் கொண்டார்கள் என்று சிலர் கூறிவரும் கருத்துக்கு அது ஒரு அறிவுறுத்தக்க விமர்சனம் என்றும் அது போன்று ஒரு தேவை இல்லை என்றும் அருவருக்கத்தக்க பிரச்சாரங்கள் திமுகவால் தான் செய்ய முடியும் அதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
விஜயின் பயணத்திட்டம் தெரிந்தால் மக்களிடையே பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படும் அதனால் அவரது பயண திட்டம் என்பது குறிப்பிட பாதுகாப்பு குழுவினரால் முடிவு செய்யப்படுகிறது அதுபடி தான் நடக்கும் என தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பு என்பது மக்களுக்காக தான் ஈரோட்டில் எந்த நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அந்த குறிப்பிட்ட நேரத்தில் பேசுவார் எனவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J