எத்தியோப்பியாவில் ஒலித்த 'வந்தே மாதரம்' பாடல் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.) பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அடிஸ் அபாபா விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று காரில் அழைத்து சென்றார். மோடியை கவுரவிக்கும்
எத்தியோப்பியாவில் ஒலித்த  'வந்தே மாதரம்' பாடல் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி


புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.)

பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அடிஸ் அபாபா விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று காரில் அழைத்து சென்றார். மோடியை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட நேற்று (டிச 16) இரவு விருந்தின் போது 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது.

எத்தியோப்பியா பாடகர்கள் பாட ஆரம்பித்ததும் பிரதமர் மோடி கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பாடலை அவர் கேட்டு ரசித்தார்.

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

எத்தியோப்பியா பாடகர்கள் 'வந்தே மாதரம்' பாடல் பாடும் வீடியோவை இன்று (டிசம்பர் 17) தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியுள்ளதாவது,

பிரதமர் அபி அகமது அலி ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில், எத்தியோப்பிய பாடகர்களால் அற்புதமான வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், அது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b