வாட்ஸ் அப்பில் வந்துள்ள பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு அப்டேட்
சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.) வாட்ஸ் அப் செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக உள்ள வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப் புது அப்டேட்கள
வாட்ஸ் அப்பில் வந்துள்ள பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு அப்டேட்


சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)

வாட்ஸ் அப் செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது.

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக உள்ள வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப் புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

துவக்கத்தில் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பும் தளமாக இருந்த வாட்ஸ் அப் செயலி, பின்னர் பல்வேறு அப்டேட்களை கொடுத்தது.

வாட்ஸ் அப்பில் ஆடியோ, வீடியோ கால் வசதி, பாடல்களை ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி என வாட்ஸ் அப் சமீபத்திய ஆண்டுகளில் கொண்டு வந்த அப்டேட்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

வாட்ஸ் அப் சந்தையில் தனக்கு உள்ள போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை கவரவும் தொடர்ச்சியாக இத்தகைய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு அப்டேட் வந்துள்ளது.

அதாவது, வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து வெளியேறும் போது, குழுவில் உள்ள பிறருக்கு தெரியாமல் வெளியேறும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

தற்போது வரை குழுவில் இருந்து வெளியேறினால், குழுவில் இருக்கும் பிற மெம்பர்களுக்கு வெளியேறிய உறுப்பினர் யார் என்பது காட்டிவிடும்.

இதனை மாற்றி, யாருக்கும் தெரியாமல் வெளியேறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் கொண்டு வந்த இந்த வசதி, பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM