Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 19 டிசம்பர் (ஹி.ச.)
மார்கழி மாதம் அன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக
கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியான கோட்டை
சாலையில் அமைந்துள்ள 18 அடி உயர கொண்ட ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயத்தியான
இன்று 1,00,008 வடை மாலைகள் சாத்தப்பட்டது.
அதிகாலை சரியாக 4.30மணி அளவில்
நடைதிறக்கப்பட்டு 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் நாமக்கல் புகழ்பெற்ற
ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை
முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும்
ஆஞ்சநேயருக்கு காலை 11 மணிக்கு பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு
சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர்
பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக
வழங்கபட உள்ளது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1
லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கோவில் அமைந்துள்ள கோட்டை சாலை முழுவதுமே போலீசார் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டு வருகின்றனர். கோட்டை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதித்து மாற்று
சாலையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக
கண்காணிப்பு கோபுரங்கள், 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், மெட்டல்
டிடெக்டர் கொண்டு கோவிலுக்குள் வரும் பக்தர்களை சோதனை செய்யப்பட்டு
கோவிலுக்குள் அனுமதிக்க படுகின்றன.
இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார்
500 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam