Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
எந்த அனுமான் குழந்தைகளை கொளுத்துங்கள் என கூறினார் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா 2025 நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி விழாவினை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது;
கிறித்துவம் அன்பை போதிக்கிறது. அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும்.
தலைமை என்பது தொண்டர்களுக்கு தொண்டாற்றுவது தான். அதுதான் தலைமை பண்பு.
வெளிநாடுகளில் இருந்து சேவை செய்ய வந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்லி எரிக்கிறார்கள். எந்த அனுமான் குழந்தைகளை கொளுத்துங்கள் என சொன்னார். இந்துக்கள் வேறு, இந்துத்துவா வேறு.
அனைத்து மதங்களிலும் பிரச்சினை இருக்கிறது.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் இருப்பார்கள். அவர்களை கடந்து விட்டு செல்லுங்கள்.
இவ்வாறு அவர் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கே தாஸ், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், சென்னை திருச்சபை பேராயர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam