Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 19 டிசம்பர் (ஹி.ச.)
ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகா பெலகாவிக்கு புறப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 07043) ஷங்கர்பள்ளி நிலையம் அருகே நுழைந்து கொண்டிருந்த போது, இன்ஜின் பின்னால் உள்ள முதல் ஜெனரல் பெட்டியின் அடியில் திடீரென தீப்பொறிகள் பறந்தன. உடனடியாக தீப்பிழம்புகளும், அடர்த்தியான புகையும் வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
சில பயணிகள் தீயை கவனித்து எச்சரிக்கை செய்தனர். ஷங்கர்பள்ளி ரயில் நிலைய அதிகாரி வாக்கி-டாக்கி மூலம் லோகோ பைலட்டுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக ரயிலை நிறுத்தி, லோகோ பைலட்கள் தைரியமாக தீ அணைப்பு சிலிண்டர்களைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர். தீ மற்ற பெட்டிகளுக்கு பரவுவதற்கு முன்பே கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ரயில் பிரேக் ஜாம் ஆகியதால் சக்கரங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பிழம்புகள் எழுந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.
தீ அணைக்கப்பட்ட பிறகு நிபுணர்களின் ஆலோசனைப்படி ரயில் பாதுகாப்பாக விகாராபாத் வழியாக பெலகாவிக்கு புறப்பட்டுச் சென்றது.
ரயில்வே அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam