Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 20 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் டிசம்பர் 24-ஆம் தேதி எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது .
ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும்.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும் பழவேற்காடு கடல் பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், 24-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு கருதி, பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b