இன்று சஷஸ்திர சீமா பலின் நிறுவன தினம் - படை வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 20 டிசம்பர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி, சஷஸ்திர சீமா பல் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 20), அப்படை வீரர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 20) எக்ஸ் தள
இன்று சஷஸ்திர சீமா பலின் நிறுவன தினம் - படை வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


புதுடெல்லி, 20 டிசம்பர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி, சஷஸ்திர சீமா பல் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 20), அப்படை வீரர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 20) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

சஷஸ்திர சீமா பலின் நிறுவன தினத்தை முன்னிட்டு, இந்தப் படையுடன் தொடர்புடைய அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சஷஸ்திர சீமா பலின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, சேவையின் உயர்ந்த மரபுகளைப் பிரதிபலிக்கிறது.

அவர்களின் கடமையுணர்வு நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஒரு வலுவான தூணாகத் திகழ்கிறது.

சவாலான நிலப்பரப்புகள் முதல் கடினமான செயல்பாட்டுச் சூழல்கள் வரை, சஷஸ்திர சீமா பல் எப்போதும் விழிப்புடன் நிற்கிறது. அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறக்க எனது நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b