Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 20 டிசம்பர் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை
ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது
அவரிடம்
SIR குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர்,
தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதுவே பொருத்தமானதாக இருக்கும் என பதில் அளித்தார்.
மேலும்
ஈரோடு பொதுகூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை
சொல்கின்றனர்,
தவளும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான்
தன்னுடைய தன்னாட்சி நடத்துவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றி கழகம்
களத்தில் இல்லாத கட்சி என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்து இருப்பது
குறித்த கேள்விக்கு,
அது அவருடைய கருத்து எனவும்,களத்தில் இருக்கின்றோமா? இல்லையா? என்பது தேர்தல்
முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும் என பதில் அளித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின்
அடுத்த பொது கூட்டம் குறித்த கேள்விக்கு,
இன்று மாலை அவரிடம் பேசி விட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம் என தெரிவித்த
அவர், எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு , எங்கள்
திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும் எனவும்
செங்கோட்டையன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam