மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், பொங்கலுக்கு டாஸ்மாக் மது விற்பனை இலக்கு எவ்வளவு நிர்ணயிக்கலாம் எப்படி கமிஷன் பெறலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு - வானதி சீனிவாசன்
சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது, செவிலியர்கள் கோரிக்கைகளை காதில் வாங்காமல் இருக்கும் திமுக அரசிற்கு தன் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வா
Vanathi


T


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது, செவிலியர்கள் கோரிக்கைகளை காதில் வாங்காமல் இருக்கும் திமுக அரசிற்கு தன் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பு ஊதியம் பெறும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

தன்னலம் கருதாது சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் செவிலியர்களைக் கூட தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பணி நிரந்தரம் செய்யாதது அவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.

இப்படி தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் என அவர்களின் கோரிக்கைகளை காதில் வாங்காமலும் அவர்கள் நலனை யோசிக்காமலும் வரும் பொங்கலுக்கு டாஸ்மாக் மது விற்பனை இலக்கு எவ்வளவு நிர்ணயிக்கலாம் எப்படி கமிஷன் பெறலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

மருத்துவம், சுகாதாரம், கல்வி இவற்றை லாப நோக்குடன் பார்க்காமல் நியாயமான அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட இந்த அரசு ஊழியர்களுக்கு எதிரான திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ