மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு - தேனியில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
தேனி, 21 டிசம்பர் (ஹி.ச.) தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியமைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தேனி
போராட்டம்


தேனி, 21 டிசம்பர் (ஹி.ச.)

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியமைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் தலைமையிலும் ,பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆர் பாட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆளும் போது பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வந்தது.

அந்த திட்டங்களுக்கு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர் வைத்து செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசானது அந்த திட்டங்களின் பெயரை மாற்றி வருகிறது.

அதே போல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை ஆரம்பித்து அந்த திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை வைத்து செயல்படுத்தி வந்தது .

ஆனால் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு புதிய மசோதா நிறைவேற்றபட உள்ளதை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Hindusthan Samachar / Durai.J