Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 21 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் தமிழகம் தலையிடும் முறை தமிழனின் பயணம் என்ற தலைப்பில் நடத்தி வரும் பிரச்சார இயக்கம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் புதுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது.
நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்வதாக பாஜக திறப்பில் அதுக்கு உண்டான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதற்காக புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்திவையல் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மற்றும் மேடை அமைக்கும ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது .
இந்த நிலையில் இன்று மேடை அமைப்பதற்கும் பந்தல் அமைப்பதற்கும் பந்த கால் முகூர்த்தம் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் தேசிய ஜனநாயக கூட்டணி இடம்பெற்றுள்ள அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஐ ஜே கே மாவட்ட தலைவர் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருப்பு முருகானந்தம் விஜயபாஸ்கர் ஆகியோர் பந்தக்கால் நடும் விழாவை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கூறுகையில்:
நயினர் நாகேந்திரனின் பிரச்சார
நிறைவு விழா புதுக்கோட்டையை குலுங்கும் வண்ணம் நடைபெற உள்ளது.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாரத பிரதமர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு பாஜக சார்பில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இதில் அனைவரும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்த கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது என்று விஜயபாஸ்கர் கூறினார்.
இதன் பின்னர் பேசிய மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறுகையில்:
பொதுக்கூட்டம் அடுத்த மாதம் ஜனவரி மாதத்தில் 15 தேதிக்குள் நிறைவடையுள்ளது.
முன்கூட்டியே ஒன்பதாம் தேதி நிறைவடையும் விழா நடத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளை புதுக்கோட்டையில் நாங்கள் செய்து வருகிறோம்.
பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநில தலைவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்ற நம்பிக்கையோடு இன்று பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு அதுக்குண்டான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளோம்
ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் மறுபுறம் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார்
நிறைவிழா என்பது பாஜக விழாவாக இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி விழாவாக இது நடத்தப்பட உள்ளது.
அன்றைய தினம் கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து தலைவர்களும் பேங்கேற்க உள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகம் திராவிட முன்னேற்றத்திற்கு கழகத்திற்கு மாற்று நாங்கள்தான் என்று கூற முயற்சி செய்கின்றனர்.
யார் வேண்டுமானால் முயற்சி எடுக்கலாம்
தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம் என்று சொன்னால் அதிமுக தான் இந்திய அளவில் மிகப்பெரிய ஏக்கம் என்று சொன்னால் பாஜக தான் நாங்கள் இருவரும் தற்போது கூட்டணியாக இணைந்துள்ளோம்
இதுவரை ஒரு தேர்தலில் கூட போட்டியிட்டு வெற்றி பெறாமல் தங்களுக்கு என்ன வாக்கு இருக்கு என்பது கூட தெரியாமல் இருப்பவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு காண்பதும் திமுக விற்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று கூறுவதும் வார்த்தை ஜாலமாக மட்டுமே பார்க்க முடியும் நிச்சயமாக அவர்கள் நினைப்பது நடைமுறைக்கு வராது
திமுக பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து கொண்டு தான் இருப்பார்கள்.
நாங்களும் திமுகவை எதிர்த்து கொண்டு தான் இருப்போம்
திமுக தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு
திமுகவின் ஏ டீம் தமிழக வெற்றி கழகம் தான் என்று நாங்கள் கூறுகிறோம் என்று கருப்பு முருகானந்தம் கூறினார்.
Hindusthan Samachar / Durai.J