Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடருகிறார். ஆனால் அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. துணை கேப்டன் பொறுப்பு அக்சர் படேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் விக்கெட் கீப்பர் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன், ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அத்துடன் இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
Hindusthan Samachar / JANAKI RAM