பிரதமர் மோடி இன்று அசாமில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை
கவுகாத்தி, 21 டிசம்பர் (ஹி.ச.) 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அசாம் சென்றார். அசாமின் நம்ரப் பகுதியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். முன்னதாக பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். படிப்பில
பிரதமர் மோடி இன்று அசாமில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை


கவுகாத்தி, 21 டிசம்பர் (ஹி.ச.)

2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அசாம் சென்றார்.

அசாமின் நம்ரப் பகுதியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். படிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் 25 மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

இதனை தொடர்ந்து பிரமபுத்திரா நதியில் படகில் பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.

இதையடுத்து, அசாமில் அண்டை நாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக 1979 முதல் 6 ஆண்டுகள் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 860 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

இதனை தொடர்ந்து நம்ரப் பகுதியில் 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அமோனியம் - யூடியா உர தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பின்னர் இன்று மாலை அசாமில் இருந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Hindusthan Samachar / JANAKI RAM