Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை வடபழனி ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள வணிக வளாகங்கள்,உணவு விடுதிகள் போன்றவைகளுக்கு பார்க்கிங் வசதிகள் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது.
இதனால் வாகனங்கள் அனைத்தும் வடபழனியை சுற்றியுள்ள குறிப்பாக மெட்ரோ ரயில்வே நிலையம்,வடபழனி காவல் நிலையம், கமலா திரையரங்கம்,சிம்ஸ் தனியார் மருத்துவமனை போன்ற இடங்களில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்கிறது.
ஆனால் ஆக்கிரமித்து இருக்கும் அந்த வாகனங்களுக்கு எந்த ஒரு அபராதமும் விதிக்காத போக்குவரத்து போலீஸார் ,வடபழனி முருகர் கோவிலுக்கு சாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் நோ பார்க்கிங்கில் விட்டதாக இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று ,அபராதம் விதித்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாகனத்தை கோயிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, சாமி தரிசனம் முடித்த பிறகு, வெளியே வந்து பக்தர்கள் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தால் இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதை அறிந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதே நேரத்தில் பக்தர்களின் மன நிலை எப்படி இருக்கும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகள் கேள்வி ஏழுப்பி வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J