கண்ணை கட்டிக்கொண்டு பானை மீது நின்று அம்பு எய்து அசர வைத்த சிறுமி
சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.) சென்னை மதுரவாயலில் அம்பு எய்தல் போட்டியில் உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடை பெற்றது. இதில் ஜூவானந்தம் என்ற 5 வயது சிறுவனும், த்ரிதி எனும் 6 வயது சிறுமியும் கண்ணை கட்டிக்கொண்டு 10 நிமிடங்களில் 100 அம்புகளை இலக்கில் ச
World record


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை மதுரவாயலில் அம்பு எய்தல் போட்டியில் உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடை பெற்றது.

இதில் ஜூவானந்தம் என்ற 5 வயது சிறுவனும், த்ரிதி எனும் 6 வயது சிறுமியும் கண்ணை கட்டிக்கொண்டு 10 நிமிடங்களில் 100 அம்புகளை இலக்கில் சரியாக எய்து புதிய உலக சாதனையை படைத்தனர்.

சிறுமி த்ரிதி கண்ணைக் கட்டிக்கொண்டது மட்டுமின்றி பானை மீதும் நின்றுகொண்டு சரியாக அம்பு எய்து காண்போரை ஆச்சர்யப்பட வைத்தார்.

‘வேர்ல்டு யங் அச்சீவர்ஸ்’ உலக சாதனை நிறுவனம் அவர்களது இந்த சாதனையை அங்கீகாரம் செய்து, அதற்கான பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கியது.

Hindusthan Samachar / Durai.J