Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச)
எடப்பாடி பழனிசாமி பெயரில் 120 தொகுதிகளுக்கு 18 லட்சம் ரூபாய் செலவு செய்து அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் விருப்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியைச் சேர்ந்த ஆரணி தெற்கு ஒன்றியச் செயலர் ரூ.18 லட்சம் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளது தனி கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வருவதையொட்டி, அதிமுக தலைமை நிலைய அறிவிப்பின்படி, சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட கட்சி நிர்வாகிகளுக்கு தற்போது விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த, தெற்கு ஒன்றியச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் என 120 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.18 லட்சத்துக்கான வரைவோலை செலுத்தி, அவருக்காக விருப்ப மனு அளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ