பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில் பாட்னாவில் இன்று வாகன பேரணி
பாட்னா, 23 டிசம்பர் (ஹி.ச.) பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் சாலை கட்டுமானத் துறை அமைச்சராகப் பணியாற்றிய நிதின் நபின் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த டிசம்பர் 20
பாஜக  தேசிய செயல்  தலைவர் நிதின் நபின் தலைமையில் பாட்னாவில் இன்று   வாகன பேரணி


பாட்னா, 23 டிசம்பர் (ஹி.ச.)

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் சாலை கட்டுமானத் துறை அமைச்சராகப் பணியாற்றிய நிதின் நபின் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசிய நிதின் நபின் இன்று (டிசம்பர் 23) பீகாரின் பாட்னா நகரில் வாகன பேரணியை நடத்தி அக்கட்சியின் வலிமையை வெளிப்படுத்தினார்.

இந்த பேரணியில் மத்திய உள்விவகார துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் சராவ்கி மற்றும் பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் சென்றனர்.

இது பற்றி பா.ஜ.க. எம்.பி. நித்யானந்த ராய் கூறும்போது, உலகின் பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. எண்ணற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வலிமையுடன் கட்சி உருவாகி உள்ளது. பாடலிபுத்திரா புனித பூமிக்கு நிதின் நபின் வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க ஒட்டுமொத்த பீகார் மக்களும் வந்துள்ளனர் என தெரிவித்தார்.

நிதின் நபின் இன்று மாலை 4 மணியளவில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து பேச இருக்கிறார். இரவு 7.30 மணியளவில் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளை சந்தித்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

இதே போன்று, கட்சி எம்.பி.க்களிடம் அவர் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்படுவார்.

Hindusthan Samachar / vidya.b