Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 டிசம்பர் (ஹி.ச.)
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதன்போது இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன்பு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
டெல்லி தவிர, திரிபுராவில் உள்ள அகர்தலா மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள விசா சேவை மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் வங்கதேச தூதரகம் அருகே பாஜக, காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தின.
இதற்கிடையே வங்கதேசத் தூதரகம் முன்பு நடந்த போராட்டம் மிகவும் சிறியது என்றும், பாதுகாப்பு மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக வங்கதேசத்தில் பாதுகாப்பு காரணம் காட்டி சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM