Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 23 டிசம்பர் ( ஹி.ச.)
ஈரோட்டில் கிராம நிர்வாக அலுவலர் கண்டித்து விடிய விடிய இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம உதவியாளர்கள் இரண்டாம் நாளாக தொடர்ந்து அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஈஞ்சம்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயந்தி.
இவருக்கும் இதே கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் கனிமொழிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் உதவியாளர் கனிமொழி ஆகியோர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்த இருவரும் அலுவலகத்தில் உள்ள அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட இருப்பிடத்தில் அமர்ந்து பணியை செய்ய தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்பு துயம் பூந்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ராதா என்ற பெண்மணியை அந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் விஏஓ மோகன் ராஜ் என்ற நபர் ஜாதி ரீதியாக அந்தப் பெண்ணை திட்ட திட்டியதாக கூறப்படுகிறது.
இதனை கேட்பதற்காக ஈஞ்சம்பள்ளி கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வரும் கனிமொழி, VAO மோகன்ராஜிடம் சென்று நியாயம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
பின்பு வழக்கம்போல் நேற்று அலுவலகத்திற்கு வந்த பொழுது ஜெயந்தி கனிமொழி உபயோகப்படுத்தப்படும் நாற்காலி மற்றும் பொருள்களை அலுவலகத்தை விட்டு வெளியே தூக்கி எறிந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார்
இதுகுறித்து தனக்கு நேர்ந்த கொடுமையை சம்பந்தப்பட்ட மொடக்குறிச்சி வட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளார், ஆனால் ஜெயந்தி மீது வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த கனிமொழியை பணி இடை மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு கிராம நிர்வாக உதவியாளர் கனிமொழி, சக கிராம நிர்வாக உதவியாளர் சங்கத்தினரிடம் தகவல் தெரிவித்து தொடர்ந்து நேற்று முதல் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்று இரவு மொடக்குறிச்சி தாலுக்கா அலுவலக வளாகத்தில் சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை தொடர்ந்து மீண்டும் இரண்டாம் நாளாக நியாயம் கேட்டு கிராம உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு சூழ்நிலை நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam