வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டம்
புதுடெல்லி, 23 டிசம்பர் (ஹி.ச.) வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைம
வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டம்


புதுடெல்லி, 23 டிசம்பர் (ஹி.ச.)

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வங்காள தேச தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை அந்நாட்டு போராட்டக்காரர்கள் கடந்த வாரம் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியாவா பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைக் கண்டித்து டெல்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்காள தேசத்தில் உள்ளஉள்ள வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மூன்று தூதரகங்களிலும் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்காள தேசம் அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகத்துக்கு வெளியே பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து இன்றும் (டிசம்பர் 23) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b