Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை மன்றத்தில் நடைபெற்ற நாடக விழாவில் பங்கேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேடையில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
அறம் என்று சொல்லும்போது தவறாக வேற எந்த அறத்தையும் நினைத்துக் கொள்ளக்கூடாது.
இந்த காலத்தில் அறம் அறம் என்று சொல்லி நம் மண்டையை கழுவிக்கொண்டே இருக்கிறார்கள்.அதை எல்லாம் விட்டு விட்டு அறம் என்று சொல்லுவது மனிதநேயம்.
தந்தை பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் சொன்ன மனிதனை மனிதன் நேசிக்க கூடியது தான் அறம். மனிதனை நேசிக்கக்கூடியது தான் அறம்.
நாடகத்தின் இறுதியில் மணிமேகலை சொன்னது போல, பெண்ணின் வாழ்க்கை தீர்மானித்துக் கொள்ள கூடிய உரிமை எனக்கில்லை என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும்.
அந்த உரிமை ஒவ்வொரு பெண்ணிற்கும் இருக்கிறது என்று நாம் புரிந்து கொண்டோம் என்றால் நிச்சயமாக இந்த சமூகத்தில் ஆணவக் கொலைகள் இருக்கவே இருக்காது.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
Hindusthan Samachar / P YUVARAJ