Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச)
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னை அருகே உள்ள திருவேற்காட்டில் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்குழுவில் 4500 பொதுக்குழு உறுப்பினர்கள்,சிறப்பு அழைப்பாளர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
சட்டமன்ற தொகுதிக்கு குறைந்தது 25 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த பொதுக்குழுவில் 20 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு,
வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு நுழைவு சீட்டு அவசியம்,
சம வேலைக்கு சம ஊதியம் என போராடி வரும் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்,
திருப்பரங்குன்ற விவகாரத்தில் இரு மத தலைவர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என எழுத வேண்டி தீர்மானம்.உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலையில் தேர்தல் செலவுக்கு நிதி திரட்டுவது,
மாதம் 1000 நிதி திட்டம்.
நாம் தமிழர் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசப்பட உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ