Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 டிசம்பர் (ஹி.ச.)
வங்காளதேசத்தை சேர்ந்த மாணவர் போராட்ட தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
துணி ஆலையில் வேலை பார்த்து வந்த தீபு சந்திரதாஸ் என்ற இந்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மாணவ தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதியை கொன்றவர்கள் மேகாலயா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து தப்பிவிட்டதாக வங்காளதேச காவல்துறை குற்றம்சாட்டியது.
இந்நிலையில், வங்காளதேசத்தின் குற்றச்சாட்டை இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய எல்லையில் தீவிரமான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வங்காளதேசத்தில் இருந்து கொலை குற்றவாளிகள் இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
மேலும், வங்காளதேச எல்லையில் எந்தவித ஊடுருவலும் இல்லை என்று மேகாலயா காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM