காபா மைதானத்தில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து 2-வது ஆஷஸ் டெஸ்ட் - இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு
பிரிஸ்பேன், 3 டிசம்பர் (ஹி.ச.) ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று
காபா மைதானத்தில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து 2-வது ஆஷஸ் டெஸ்ட் - இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு


பிரிஸ்பேன், 3 டிசம்பர் (ஹி.ச.)

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை

(4-ம் தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்களே தொடர்கின்றனர்.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்:

1. ஜாக் கிராலி

2. பென் டக்கெட்

3. ஓலி போப்

4. ஜோ ரூட்

5. ஹாரி புரூக்

6. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)

7. ஜேமி ஸ்மித்

8. வில் ஜாக்ஸ்

9. கஸ் அட்கின்சன்

10. பிரைடன் கார்ஸ்

11. ஜோப்ரா ஆர்ச்சர்

Hindusthan Samachar / JANAKI RAM