Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
வாட்ஸ்அப் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடக ஆப்களில் ஒன்றாகும்.
வாட்ஸ்அப்பை மிகவும் பிரபலமாக்குவது என்னவென்றால், அது எந்த சிக்கலும் இல்லாமல் எளிதாக செய்திகளை அனுப்ப உங்களை அனுமதிக்கிறது. ஆனால், பெரிய ஃபைல்களை வாட்ஸ்அப் வழியாக அனுப்ப முடியாது என்பது பொதுவான கருத்து உள்ளது.
நீளமான வீடியோக்கள், தெளிவான புகைப்படங்கள், மிகப் பெரிய டாக்குமென்ட்கள் ஆகியவை அதன் தரத்தை இழக்காமல் வாட்ஸ்அப்பில் அனுப்புவது முக்கியமானதாகி வருகிறது.
கேலரி ஆப்ஷன் மூலம் பெரிய ஃபைல்களை அனுப்பும்போது வாட்ஸ்அப் தானாகவே சுருக்கிக் கொள்வதால், அசல் ஃபைலின் கிளாரிட்டி மற்றும் ரெசலூஷன் பெரும்பாலும் குறைக்கப்படுகின்றன.
பிசினஸ் கம்யூனிகேஷன், எடுகேஷனல் ஒர்க், கிரேட்டிவ் ப்ராஜெக்ட் போன்றவற்றிற்காக பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப்-ஐ நம்பியுள்ளனர். எனவே, கிளாரிட்டி மற்றும் ரெசலூஷனின் தரத்தை பாதிக்காமல் பெரிய ஃபைல்களை ஷேர் செய்வதற்கான வழிகளை மக்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பெரிய ஃபைல்களை அவற்றின் கிளாரிட்டி மற்றும் ரெசலூஷனின் தரத்தை பாதிக்காமல் அனுப்பும் வழிகளை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.
டாக்குமென்ட் அப்லோடு, கிளவுட் ஸ்டோரேஜ், ஃபைல் ட்ரான்ஸ்பர் பிளாட்காஃபார்ம்ஸ் அல்லது ZIP ஃபார்மேட்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பெரிய ஃபைல்களை முழு தரத்தில் எளிதாக ஷேர் செய்யலாம். இது மிகத் தெளிவான கிளாரிட்டியை வழங்குகின்றன. அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
இந்த 4 எளிய ட்ரிக்குகளைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் பெரிய ஃபைல்களை அனுப்பலாம்.
1. ஃபைல்களை டாக்குமென்ட்டாக அனுப்புதல்:
- வாட்ஸ்அப்பை ஓபன் செய்து, ஃபைல்களை அனுப்ப விரும்பும் சேட்-ஐ செலக்ட் செய்யவும்.
- அட்டாச்மென்ட் ஐகானை கிளிக் செய்யவும்.
- கேலரிக்குப் பதிலாக டாக்குமென்ட்டை செலக்ட் செய்யவும்.
- நீங்கள் அனுப்ப விரும்பும் ஃபைலை பிரௌஸ் செய்து செலக்ட் செய்யவும்.
- ஃபுல் கிளாரிட்டி ஃபைலை ஷேர் செய்ய சென்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
2. பெரிய ஃபைல்களை கூகுள் டிரைவில் அப்லோடு செய்து லிங்க்கை ஷேர் செய்யவும்.
- கூகுள் டிரைவை ஓபன் செய்து பிளஸ் ஐகானை கிளிக் செய்யவும்.
- அப்லோடு என்பதை செலக்ட் செய்து உங்கள் போனில் இருந்து ஃபைலை செலக்ட் செய்யவும்.
- அப்லோடு செய்த பிறகு, ஃபைலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
- மேனேஜ் அக்சஸ் அல்லது ஷேர் என்பதை செலக்ட் செய்யவும்.
- ஷேர் செய்யக்கூடிய லிங்க்கை காப்பி செய்து வாட்ஸ்அப்பில் பேஸ்ட் செய்யவும்.
3. வீட்ரான்ஸ்பர் போன்ற ஃபைல் ட்ரான்ஸ்பர் பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்தவும்.
- வீட்ரான்ஸ்பர் அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த பிற ஆப்-ஐ ஓபன் செய்யவும்.
- உங்கள் ஃபைலை பிளாட்ஃபார்மிற்கு அப்லோடு செய்யவும்.
- சிஸ்டம் டவுன்லோடு செய்யப்பட்ட லிங்க்கை ஜெனெரேட் செய்யும்வரை காத்திருக்கவும்.
- டவுன்லோடு செய்தபின்னர் வழங்கப்பட்ட லிங்க்கை காப்பி செய்யவும்.
- ரெசிபியன்ட்டுக்கு வாட்ஸ்அப் மூலம் லிங்க்கை அனுப்பவும்.
4. ZIP அல்லது RAR ஃபைலை உருவாக்கவும்
- WinZip அல்லது RAR போன்ற ZIP அல்லது RAR ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.
- ஆப்பை ஓபன் செய்து நீங்கள் கம்ப்ரெஸ் செய்ய விரும்பும் ஃபைல்களை செலக்ட் செய்யவும்.
- கிரியேட் ZIP அல்லது கிரியேட் RAR என்பதை கிளிக் செய்யவும்.
- கம்ப்ரெஸ் செய்யப்பட்ட ஃபைலை உங்கள் டிவைஸில் சேவ் செய்யவும்.
- வாட்ஸ்அப்பை ஓபன் செய்து, டாக்குமென்ட்டை செலக்ட் செய்து, ஜிப் ஃபைலை அனுப்பவும்.
Hindusthan Samachar / JANAKI RAM