Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 டிசம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம்
ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டின் கடைசி செவ்வாய்க்கிழமை மற்றும் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை என்பதால்
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மூலவர் பாலசுப்ரமணியர் ராஜ அலங்காரத்தில்
பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல்
நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி
வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனிடையே போதிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லாததால்
பொதுமக்கள் ஆலய வாயிலில் முண்டியடித்து கொண்டு செல்கின்றனர்.
காவலர்களை நியமித்து பக்தர்கள் விரைவாக சாமி தரிசனமா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam