Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 5 டிசம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர்கள் சிறப்பு தீவிர சீர்த்திருத்தப் பணிகளில் திமுகவினர் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபடுவதாக தேனி மாவட்ட பாஜகவினர் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது
இது குறித்து தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் கூறுகையில்,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்ட ஐடி - யை பெற்று திமுகவினர் தங்களுக்கு தேவையான வாக்காளர்களை தாங்களாகவே பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றக்கூடாது என திமுகவினர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்த வாக்காளர்களை பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு உரிய விசாரணை நடத்தி வாக்காளர் பட்டியலில் இணைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் வாக்காளர்கள் நிரப்பி கொடுக்கும் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) பள்ளி, கல்லூரி மாணவர்களை வைத்து பதிவேற்றம் செய்யப்படுவதாகும் இதனால் வாக்காளர்கள் பலரின் பெயர் முறையாக பதிவேற்றப்படுவதில்லை என்றும் புகார் தெரிவித்த பாஜகவினர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் முறையாக விசாரணை நடத்தி SIR பணிகளை முறைபடுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
Hindusthan Samachar / Durai.J