Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 5 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நையினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் உத்தரவின் படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வரதராஜன், உமா ஹைமாவதி, மகளிர் அணி மாவட்ட தலைவி விஜயா, மாவட்ட துணை தலைவர் விஜயேந்திர பாலாஜி, நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / Durai.J