Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 5 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் அலுவலக சங்கம் சார்பாக நடத்திய கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதே போல,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகாமையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அனைத்து சங்கத்தின் அலுவலர் சார்பாக சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து கைகளில் பதாகங்களை ஏந்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில்,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10% உதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
2016 க்கு முன்பின் ஓய்வூதிய முரண்பாட்டை சமப்படுத்த வேண்டும் ஓய்வூதியர் இறக்கும் நேரில் ரூபாய் ஒரு லட்சம் ஆக உயர்த்தி தர வேண்டும்.
என்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பையா செயலாளர் சிதம்பரம் மற்றும் ஓய்வூதிய சங்கத்தின் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
Hindusthan Samachar / V.srini Vasan