பேங்க் அக்கவுண்ட் வழியாக பணத்தை அனுப்ப ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள்
சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.) பேங்க் அக்கவுண்ட் வழியாக பணத்தை அனுப்பும் கஸ்டமர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதை செய்யாமல் போனால், ரூ.50,000 மேல் பணத்தை அனுப்ப முடியாகமல் போகலாம். ஆகவே
பேங்க் அக்கவுண்ட் வழியாக பணத்தை அனுப்ப ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள்


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)

பேங்க் அக்கவுண்ட் வழியாக பணத்தை அனுப்பும் கஸ்டமர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதை செய்யாமல் போனால், ரூ.50,000 மேல் பணத்தை அனுப்ப முடியாகமல் போகலாம். ஆகவே, இந்த புதிய விதிகள் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பான் கார்டு (PAN Card) இருந்தால் மட்டுமே, பேங்க் அக்கவுண்ட்டில ரூ.50,000 மேல் பணத்தை அனுப்ப முடியும். அதே போல நெப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற பரிவர்த்தனைகளையும் பான் கார்டு இருந்தால் மட்டுமே செய்து கொள்ள முடியும். இந்த பான் கார்டு செயலிழப்பு செய்யப்பட்டால், லிமிட்டுக்கு மேல் பணத்தை அனுப்ப முடியாமல் போகலாம்.

இந்த பான் கார்டு செயலிழப்பு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து நடக்க இருக்கிறது. அதாவது, பான் கார்டுடன் ஆதார் (Aadhaar) எண்ணை இணைக்காமல் இருந்தால், பான் கார்டு செயலிழப்பு செய்யப்படுவது மட்டுமல்லாமல், ரூ.1,000 பெனால்டி செலுத்த வேண்டி இருக்கும். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த பான் ஆதார் இணைப்பை செய்துவிட வேண்டும்.

பான் ஆதார் லிங்க் செய்வது எப்படி?

1. வருமான வரித் துறையின் (Income Tax Department) வெப்சைட்டை ஓப்பன் செய்து, ஹோம் பேஜில் (Home Page) இருக்கும் குயிக் லிங்க்ஸ் (Quick Links) பிரிவுக்கு செல்லுங்கள்.

2. லிங்க் ஆதார் (Link Aadhaar) விருப்பத்துக்கு சென்று கொள்ளுங்கள்.

3. பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை இங்கு கொடுக்க வேண்டி இருக்கும்.

4. 10 டிஜிட் பான் நம்பர் மற்றும் 12 டிஜிட் ஆதார் நம்பரை சரியாக கொடுத்து கொள்ளுங்கள்.

5. கீழே இருக்கும் செக் பாக்ஸை (Check Box) டிக் செய்துவிட்டு, வேலிடேட் (Validate) விருப்பததை கிளிக் செய்ய வேண்டும்.

6. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு இதை செய்தால், ரூ.1,000 பெனால்டி (Penalty) செலுத்த வேண்டி இருக்கும். இதை செய்தால் மட்டுமே. அடுத்த செயல்முறைக்கு செல்ல முடியும்.

7. பேமெண்ட்டை டெபிட் கார்டு (Debit Card), நெட்பேங்கிங் (Netbanking) போன்றவற்றில் செய்து கொள்ளலாம்.

8. இந்த பேமெண்ட்டுக்கு சலான் ஜெனரேட் (Payment Challan) செய்யப்படும்.

9. பேமெண்ட் செய்த பிறகு உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி (One Time Password) அனுப்பி வைக்கப்படும். இது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பராக இருக்க வேண்டும்.

10. இது 6 டிஜிட்டில் இருக்கும். இதை கொடுத்துவிட்டு, இறுதியாக வேலிடேட் (Validate) விருப்பத்தை தேர்ந்தெடுங்கள். பான் ஆதார் லிங்க் முடிந்துவிட்டது.

பான் ஆதார் லிங்க் ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி?

1. வருமான வரித் துறையின் வெப்சைட்டுக்கு செல்லுங்கள். குயிக் லிங்க்ஸ் பிரிவுக்கு சென்று லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் (Link Aadhaar Status) விருப்பத்துக்கு செல்லுங்கள்.

2. 10 டிஜிட் பான் கார்டு நம்பர் மற்றும் 12 டிஜிட் ஆதார் நம்பர் கேட்கப்படும். இதை கொடுங்கள்.

3. வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் (View Link Aadhaar Status) விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

4. உங்களது பான் இணைக்கப்பட்டுவிட்டதா, இல்லையா என்பது இதில் காண்பிக்கப்படும். இதில் பான் லிங்க் செய்யப்பட்டுவிட்டது (PAN Already Linked), பான் லிங்க் செய்யப்படவில்லை (PAN Not Linked) மற்றும் பெண்ட்டிங்கில் (Pending) இருக்கிறது ஆகிய மூன்று பதில்கள் காண்பிக்கப்படும்.

பெண்டிங்கில் இருந்தால், ஓரிரு நாட்களில் லிங்க் செய்யப்படும். லிங்க் செய்யப்படவில்லை என்று வந்தால், பான் விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்கள் ஒத்துப்போகவில்லை என்று அர்த்தம். ஆகவே, அதை சரி செய்து கொள்ளுங்கள்.

Hindusthan Samachar / JANAKI RAM