பாரிவாக்கம் ஏரி நிறைந்து தண்ணீர் வழிந்தது -வாகன ஓட்டிகள் அவதி
சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.) பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் ஏரி அமைந்துள்ளது அதிக பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தொடர்ந்து ஏரி நிரம்பியது இந்த ஏரியிலிருந்து உபரி நீர் செல்வதற்கு ம
நீர்


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் ஏரி அமைந்துள்ளது அதிக பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தொடர்ந்து ஏரி நிரம்பியது இந்த ஏரியிலிருந்து உபரி நீர் செல்வதற்கு முறையான மதகுகள் இல்லாத காரணத்தால் பாரிவாக்கம் சாலையின் ஓரத்திலேயே ஏரி நிரம்பி உபரி நீரானது சாலையில் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதனால் பூந்தமல்லி - பாரிவாக்கம் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர்.

மேலும் ஏரியிலிருந்து வழிந்து ஓடும் நீரானது அருகில் இருந்த தனியார் கம்பெனிகளுக்குள் புகுந்ததால் அங்கு பணிபுரிபவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

முறையாக இந்த ஏரியிலிருந்து உபரிநீர் செல்வதற்கு மதகுகள் அமைக்காததால் ஆண்டுதோறும் பெய்யும் மழைக்கு இந்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மதகுகள் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்

Hindusthan Samachar / Durai.J