Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 5 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாநகரின் திருக்கோவிலூர் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்காவினன தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர், உதயநிதி ஸ்டாலின் வருகையால் பூங்காவை சுற்றிலும் வாயைத்தார் மற்றும் கரும்புகளை தோரணமாக கட்டி வைத்துள்ள நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் வாயைத்தார் மற்றும் கரும்புகளை போட்டி போட்டு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழை மரத்துடன் வாழைத்தார் தோரணங்களும் கரும்புகளும் கட்டப்பட்டிருந்தன. பூங்கா திறந்ததும் பொது மக்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும் வாழைத்தார் வாழை மரத்திலிருந்து வெட்டி எடுத்து வேக வேகமாக தூக்கிச் சென்றனர்.
அங்கு பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு வாழைத்தார் கூட கொடுக்கவில்லை என்று அங்கு இருந்த தூய்மை பணியாளர்கள் பேசிக்கொண்டனர். டாட்டா ஏஸ் வாகனங்களிலும் மொத்தமாக ஒரு சிலர் வாழைத்தார்கள் கரும்புகளையும் ஏற்றி சென்றனர்.
செண்டை மேளம் வாசிக்க வந்த நபர்களும் கரும்பு மற்றும் வாழைத்தார்களை அவர்கள் பங்க்கு எடுத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN