பூர்ணிமா அன்று புனித நீராடல்- ரயில் நிலையங்களில் பக்தர்களுக்கு நல்ல வசதிகள் - அஸ்வினி வைஷ்ணவ்
புதுடெல்லி, பிப்ரவரி 10 (ஹி.ச.) மகா கும்பமேளாவுக்காக மாக் மாத பௌர்ணமி நாளில் புனித நீராடுவதை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள 8 ரயில் நிலையங்களில் அரசாங்கம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்
பூர்ணிமா அன்று புனித நீராடல்: ரயில் நிலையங்களில் பக்தர்களுக்கு நல்ல வசதிகள் - அஸ்வினி வைஷ்ணவ்


புதுடெல்லி, பிப்ரவரி 10 (ஹி.ச.)

மகா கும்பமேளாவுக்காக மாக் மாத பௌர்ணமி நாளில் புனித நீராடுவதை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள 8 ரயில் நிலையங்களில் அரசாங்கம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ரயில் நிலையங்களில் பக்தர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க மத்திய அரசு உத்தரபிரதேச அரசுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

பிரயாக்ராஜ் சங்கமா ரயில் நிலையம் இந்த மாதம் 14 ஆம் தேதி வரை பயணிகள் போக்குவரத்திற்காக மூடப்படும் என்று அவர் கூறினார். மகாாகும்பமேளா பகுதியைச் சுற்றியுள்ள 8 நிலையங்களில் இருந்து வழக்கமான மற்றும் சிறப்பு ரயில்கள் சீராக இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV