Enter your Email Address to subscribe to our newsletters
ஜெருசலம், 10 பிப்ரவரி (ஹி.ச.)
கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலைத் தாக்கி 1,143 பேரைக் கொன்றனர். இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ஆவர். இந்த நடவடிககியின் மூலம் இஸ்ரேல் - காசா போர் தொடங்கியது. இதையடுத்து இஸ்ரேல் காசா பகுதி மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதோடு 2024 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 43,000-க்கும் மேற்பட்ட காச மக்களையும், அங்கிருக்கும் போராளிகளையும் கொன்றதோடு, காசாவை முழுவதுமாக அழிக்கப்போவதாக சபதேம் ஏற்று தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வந்தது.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான இந்த போர் சுமார் 15 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் தங்கள் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது.
மேலும், இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் மீண்டும் தங்கள் இருப்பிங்களுக்கு செல்லவும் இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏராளமான பாலஸ்தீனர்கள் வடக்கு காசவுக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், வடக்கு காசாவையும், தெற்கு காசாவையும் இணைக்கும் நெட்சரிம் பகுதியில் இருந்த இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்பட்டது, என்று இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மேலும் சில முக்கிய பகுதிகளில் இருந்த இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்பட்டு வருவதால், வருட கணக்கில் நடந்து வந்த இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar