Enter your Email Address to subscribe to our newsletters
கொச்சி, 10 பிப்ரவரி (ஹி.ச.)
மம்மூட்டி நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு தற்காலிக தலைப்பாக ’MMMN’ என்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன், நாயகன் மம்மூட்டி, முக்கியமான வேடத்தில் நடிக்கும் மோகன் லால் மற்றும் கதாநாயகி நயன்தாரா ஆகியோரின் முதல் எழுத்தக்களைக் கொண்டு தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை, துபாய், கொச்சி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார். படப்பிடிப்பில் மம்மூட்டி மற்றும் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நயன் தாரா மற்றும் மம்மூட்டி இதற்கு முன் தஸ்கரா வீரன், ராப்பகல், பாஸ்கர் தி ராஸ்கல் மற்றும் புதிய நியமம் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது கூறிப்பிடத்தக்கது.
’டேக் ஆஃப்’, ’மாலிக்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் மலையாள சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்திருக்கும் மகேஷ் நாராய்ணன் இயக்கும் இப்படத்தை ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். பகத் பாசில், குஞ்சாக்கோ போபன், தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, சரின் ஷிஹாப், ராஜிவ் மேனன், ரெஞி பானிக்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar