இந்தியாவின் இதயமாக டெல்லி உருவான நாள் இன்று!
சென்னை, 10 பிப்ரவரி (ஹி.ச.) ஒரு நாட்டின் தலைநகரம் என்பது அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தை குறிக்கும். அதே சமயம், அதுவே அந்நாட்டின் இதயமாகவும் விளங்கும். அந்த வகையில், இந்தியாவின் இதயமாக டெல்லி உருவான நாள் தான் இன்றும். ஆம், இதே பிப்ரவரி 10 -ஆ
டெல்லி உருவான நாள் இன்று


சென்னை, 10 பிப்ரவரி (ஹி.ச.)

ஒரு நாட்டின் தலைநகரம் என்பது அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தை குறிக்கும். அதே சமயம், அதுவே அந்நாட்டின் இதயமாகவும் விளங்கும். அந்த வகையில், இந்தியாவின் இதயமாக டெல்லி உருவான நாள் தான் இன்றும். ஆம், இதே பிப்ரவரி 10 -ஆம் தேதி தான் பிரிட்டன் இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபுவால் புது டெல்லி இந்தியாவின் தலைநகராக தொடங்கி வைக்கப்பட்டது.

டெல்லி ராஜபுதன மற்றும் முகலாயர்கள் என்று பலரை கண்டுள்ளது. இறுதியாக பிரிட்டன் ஆட்சியாளர்களாக் ஆளப்பட்டு, பிரிட்டன் இந்தியாவில் தலைநகராக அறிவிக்கப்பட்டு தற்போது சுதந்திர இந்தியாவின் தலைநகராக கம்பீரமாக நிற்கிறது.

முகலாயர்கள் ஆட்சியின் போதும் டெல்லி தலைநகராக இருந்தாலும், துக்ளக் போன்ற முகலாய மன்னர்களால தலைநகராக இருந்த டெல்லி மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் தலைநராக்கபப்ட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது. இப்படி பல்வேறு கலாச்சாரங்களை சந்தித்து, பலவகையான மக்களை டெல்லி பார்த்திருக்கிறது.

முகலாய மன்னர்களுக்குப் பிறகு ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த போது 1911ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அதே சமயம் டெல்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து டெல்லிக்கு மாற்றியது.

கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் டெல்லிக்கு மாற்றியது. 1911ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது டெல்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரிட்டன் இந்தியாவின் புதிய தலைநகராக டெல்லியை அறிவித்தனர்.

மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு டெல்லியில் உள்ள கரோனேசன் பூங்காவில் அடிக்கல் நாட்டினார். புது டெல்லியின் பெரும்பகுதியான கட்டுமானப்பணிகள் 1911ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி பிரிட்டன் இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் புது டெல்லி இந்தியாவின் தலைநகராக தொடங்கி வைக்கப்பட்டது.

Hindusthan Samachar / J. Sukumar