Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 10 பிப்ரவரி (ஹி.ச .)
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமாக திகழும் சொமேட்டோ, கடந்த 2008 ஆம் ஆண்டு ’ஃபுட்டி பே’ (Foodie-Bay) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பிறகு 2010 ஆம் ஆண்டு சொமேட்டோ என பெயர் மாற்றப்பட்டு, ஆன்லைன் உணவு டெலிவரி வணிகத்தில் தொடர்ந்து ஏறுமுகம் கண்ட நிலையில், தற்போது மீண்டும் பெயர் மாற்றப்பட்டு ‘எட்டர்னல்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்திர் கோயல், நிறுவன பங்குதாரர்களுக்கு அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,
பிளிங்கிட்டை வாங்கிய போது நிறுவனத்தையும் பிராண்டையும் வேறுபடுத்தும் விதமாக எட்டர்னல் என நாங்கள் அழைக்க தொடங்கினோம். அதை ஒருநாள் அனைவரும் அறியும் விதமாக பொதுவெளியில் அறிவிக்கும் திட்டத்தையும் அப்போது கொண்டிருந்தோம்.
இன்று அந்த இடத்தை எட்டி உள்ளதாக கருதுகிறோம். அதனால், சொமேட்டோ லிமிடெட் என உள்ள நிறுவனத்தின் பெயரை எட்டர்னல் லிமிடெட் என மாற்ற விரும்புகிறோம். இதில் பிராண்ட் அல்லது செயலியில் தாங்கள் மாற்றத்தை மேற்கொள்ளவில்லை. இதற்கான ஒப்புதலை நிர்வாக க்குழு வழங்கி உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar