’ஓபன் ஏஐ’ நிறுவனத்தை  எலான் மஸ்க்குக்கு விற்பனை செய்ய ஆல்ட்மேன் மறுப்பு!
நியூயார்க், 11 பிப்ரவரி (ஹி.ச.) உலக பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டார்கள் குழு ஓபன் ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர்களுக்கு வாஙக் தயாராக உள்ளதாக அறிவித்த நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மறுப்பு
எலான் மஸ்க்குக்கு விற்பனை செய்ய ஆல்ட்மேன் மறுப்பு


நியூயார்க், 11 பிப்ரவரி (ஹி.ச.)

உலக பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டார்கள் குழு ஓபன் ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர்களுக்கு வாஙக் தயாராக உள்ளதாக அறிவித்த நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ல் ஓபன் ஏஐ நிறுவனம் நிறுவப்பட்ட போது அதன் இணை நிறுவனராக எலான் மஸ்க் இருந்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு அவர் இந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டுவர நினைத்தபோது பிரச்சனை ஏற்பட்டது எனவே அவர் ஓபன் நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இதையடுத்து, லாப நோக்கற்ற செயல்பாட்டில் இருந்து ஓபன் ஏஐ நிறுவனம் லாபத்தை நோக்கி மாறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதன் பின்னணியில் அந்த நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஏஐ சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதி திரட்ட சாம் ஆல்ட்மேன் திட்டமிட்டிருக்கும் சூழலில், எலான் மாஸ்க் கொடுத்த 97.4 பில்லியன் டாலர் சலுகையை அவர் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / J. Sukumar