Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)
ஒலிம்பிக் மற்றும் கேலோ இந்தியா போட்டிகளில் பேண்டி என்று அழைக்கப்படும் ஐஸ் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஜம்மு அண்ட் காஷ்மீருக்கு சென்று பயிற்சி எடுத்த பின் சென்னை வருகை.
பேண்டி என்று அழைக்கப்படும் ஐஸ் ஹாக்கி ஒலிம்பிக் மற்றும் கேலோ இந்தியா போட்டிகளில் நடைபெற உள்ளது இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த காஞ்சி மாவட்டத்தில் உள்ள வீரர் வீராங்கனைகள் மூன்று நாள் பயிற்சி எடுப்பதற்காகவும் பயிற்சி போட்டிகளில் பங்கேற்பதற்காகவும் ஜம்மு அண்ட் காஷ்மீரில் உள்ள ஐஸ் ஹாக்கி ஸ்டேடியத்திற்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த பயிற்சி மற்றும் பயிற்சி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் விமான மூலம் டெல்லியில் வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் அவரது பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது...
பேண்டி என்று அழைக்கப்படும் ஹைஸ் ஹாக்கி பயிற்சி எடுப்பதற்கு தமிழகத்தில் எங்கேயும் ஸ்டேடியங்கள் கிடையாது என்றும் மேலும் வரப்போகும் ஒலிம்பிக் மற்றும் கேலோ இந்தியா போட்டிகளில் இந்த ஐஸ் ஹாக்கி என்று அழைக்கப்படும் பேண்டில் போட்டியில் நடைபெற உள்ளது என்றும் இதில் பங்கேற்பதற்காக நாங்கள் ஜம்மு அண்ட் காஷ்மீருக்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வந்தோம் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசுக்கு பயிற்சியாளர் மற்றும் வீராங்கனைகள் தமிழகத்திலேயே இந்த பேண்டி என்று அழைக்கப்படும் ஹைஸ் ஹாக்கி போட்டிகளுக்கு பயிற்சி எடுப்பதற்காக ஸ்டேடியங்களை உருவாக்கி தர வேண்டும் என்று விளையாட்டு துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை வைத்தனர்.
Hindusthan Samachar / Durai.J