Enter your Email Address to subscribe to our newsletters
பெங்களூர், 11 பிப்ரவரி (ஹி.ச.)
கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரில் சீரியல் கில்லர்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இந்த தகவல்களால் மக்கள் மேலும் அச்சமடைந்த நிலையில், தற்போது இது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து துணை காவல் ஆணையர் தேவராஜா கூறுகையில்,
“கடந்த 8 ஆம் தேதி நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் கொலை முயற்சி செய்த நபர் மதுபாதையில் குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்தார். கோபத்தில் நான்கு பேரை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அவர் மீது சிறு சிறு திருட்டு வழக்குகள் போடப்பட்டு இருக்கிறது. மற்றபடி, இந்த சம்பவங்களின் பின்னணியில் சீரியல் கில்லர் யாரும் இல்லை.
இந்திய சட்டங்கள் சீரியல் கில்லர்களுக்கென எந்த வரையறையும் குறிப்பிடவில்லை. பொதுப்படையில் ஒரு தனிநபர் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்தால் அவரை சீரியல் கில்லர் என்று குறிப்பிடப்படுகிறது. பெங்களூர் கத்திகுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களின் உடல்நிலை தற்போது ஆபத்தை கடந்துள்ளது.என்றார்.
Hindusthan Samachar / J. Sukumar