Enter your Email Address to subscribe to our newsletters
திருச்சி, 11 பிப்ரவரி (ஹி.ச.)
திருச்சி தீரன்நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வில்லா வீடுகள் இருக்கும் வீட்டு வளாகத்தில் பூட்டிய வீட்டுக்குள் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், தீரன்ந்கர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வில்லா வீடுகள் கொண்ட வீட்டு வளாகம் அமைந்துள்ளது. குடியிருப்பு வளாகத்தை சுற்றி சுமார் ஆறடி உயரம் கொண்ட சுற்றுச்சுவரும், அதன் மேல் வேலியும் அமைக்கப்பட்டுள்ளன. கோரையாறு கரையை ஒட்டி வரிசையாக 12 வீடுகள் அமைந்துள்ளன. இதில் ஆறாம் என் வீட்டில் அந்த குடியிருப்பின் நலச் சங்க தலைவர் முத்துசாமி என்பவரும், ஏழாம் என் வீட்டில் பொறியாளர் மகேந்திரன் என்பவரும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகேந்திரன் மற்றும் முத்துசாமி இருவரது குடும்பத்தாரும் வெளியூர் சென்று விட்டனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் இந்த வீடுகளுக்கு பின்னால் உள்ள சுற்றுச் சுவர் கம்பி வேலையை வெட்டிவிட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்த திருடர்கள் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்த நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டு உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காணாமல் போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு பற்றிய விவரங்கள் சரியாக தெரியவில்லை, என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / J. Sukumar