Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 11 பிப்ரவரி (ஹி.ச.)
காங்கிரஸ் எம்பி-யும், உருது கவிஞருமான இம்ரான் பிரதாப்கர், மீது குஜராத் காவல்துறை பதிவு செய்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம், குஜராத் காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை புத்தியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் கவிதசி ஒன்றை இம்ரான் பிரதாப்கர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். அந்த கவிதை வெறுப்பு மற்றும் வன்முறை செய்தியைப் பரப்புவதாக கூறி, குஜராத் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இம்ரான் பிரதாப்கர், தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரியிருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
இதையத்து இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான் பிரதாப்கர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குஜராத் காவல்துறையும் உயர் நீதிமன்றமும் இந்த உருது கவிதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. தயவுசெய்து உங்கள் புத்தியை பயன்படுத்துங்கள். இது ஒரு கவிதை மட்டுமே. எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் கூட, நாம் அதில் ஈடுபடுவதில்லை என்பதே இந்தக் கவிதையின் செய்தி. படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, எப்.ஐ.ஆரில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / J. Sukumar