Enter your Email Address to subscribe to our newsletters
பெங்களூர், 11 பிப்ரவரி (ஹி.ச.)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ள இந்த தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போடி ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு சமீபத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் மருத்துவக் குழுவினர், தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மாக எதுவும் தெரிவிக் கப்பட வில்லை.
இந்த நிலையில் சாம்பி யன்ஸ் டிராபி போட் டிக்கான வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. இதனால் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வுக் குழுவினர் இன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது. ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதி இல்லாமல் இடம்பெறாமல் போனால் அவர் இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் வேகப்பந்து வீரர் ஹர்ஷித் ராணாவும், பும்ராவுக்கான இடத்தில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
Hindusthan Samachar / J. Sukumar