Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத்தவிர்த்து பல்வேறு தொழில் முதலீடுகளுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.7375 கோடி முதலீட்டுக்கான தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் மூலம் 19,300 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவு படுத்தப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்லூர் மாவட்டங்கள் இந்த தொழிற்சாலைகள் அமைய உள்ளதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / Raj