Enter your Email Address to subscribe to our newsletters
தமிழ்நாடு, 11 பிப்ரவரி (ஹி.ச)
கீதா ஆர்ட்ஸ் - அல்லு அரவிந்த்,பன்னி வாஸ் தயாரித்து சந்து மொண்டேட்டி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தண்டேல்
இத் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், பப்லு பிருதிவீராஜ், கல்ப லதா, கல்யாணி நடராஜன், பார்வதீசம், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா, மைன் கோபி, ஆடுகளம் நரேன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாயகன் நாக சைதன்யாவும் நாயகி சாய் பல்லவியும் சிறுவயதிலிருந்து காதலிக்கின்றனர்.
கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நாக சைதன்யா 9 மாதங்களுக்கு ஒரு முறை தான் ஊர் திரும்புவார்.
மாதம் ஒருமுறை கரை ஒதுங்கும் போது அவரது செல்போனில் டவர் இருக்கும் அந்த நேரத்தில் மட்டுமே தனது காதலியான சாய் பல்லவியிடம் பேசுவார் இந்த ஒரு போனுக்காக காத்திருக்கும் நாயகி 9 மாதத்திற்கு ஒருமுறை நேரில் சந்திப்பார் 3 மாதத்திற்கு பிறகு திரும்பவும் கடலுக்கு சென்று விடுவார் நாக சைதன்யா
இந் நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒருவர் உயிரிழந்து அவரை ஊருக்கு கொண்டு வருகிறார்கள்.
இதைப் பார்த்த சாய் பல்லவிக்கு காதலன் நாக சாய்தன்யாவை கடலுக்கு அனுப்ப மனமில்லாமல் இனிமேல் கடலுக்கு போக வேண்டாம் என்று கூறுகிறார்.
அதை மீறி நாக சைதன்யா,
கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார் எல்லை தாண்டி மீன் படுத்ததாக பாகிஸ்தானிய கடற்படையினர் அவரை பிடித்து செல்கின்றனர்.
இந்நிலையில் சாய் பல்லவிக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது
பாகிஸ்தான் சிறையில் இருந்து நாக சைய்தன்யா விடுதலையானரா? சாய் பல்லவியை திருமணம் செய்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை
தண்டேல் என்பதற்கு தலைவன் என்று அர்த்தம் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் போது சக நண்பர்களே பத்திரமாக பார்த்துக் கொள்வதும் பாகிஸ்தான் சிறையில் இருந்து அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தும் ஒருவருக்கு மட்டும் கிடைக்கவில்லை என்றதும் அவரை விட்டு விடாமல் அவர் வந்தால் தான் நானும் சிறையை விட்டு வெளியே செல்வேன் என்ற கதாபாத்திரத்திலும் தண்டேலாக தலை நிமிர்ந்து நிற்கிறார் நாக சைதன்யா
காதலுக்காக உருகுவதும் பாகிஸ்தான் சிறையில் தன் காதலியை பிரிந்து வாடும் காட்சிகளில் அசத்தியுள்ளார் நாக சைதன்யா
பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிரித்விராஜ், மைம் கோபி ஆகிய அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்
ஒரு உண்மை சம்பவத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் சந்து மொண்டேட்டி.
மொத்தத்தில், ‘தண்டேல்’ தலை நிமிர்ந்து நிற்கிறான்.
Hindusthan Samachar / Durai.J