Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 11 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்தில், பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூசமாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் இன்றி உலகின் பல பகுதிகளில் இருக்கும் தமிழர்களும் தைப்பூசத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், வட மாநிலமான டெல்லியிலும் தமிழர்கள் தைப்பூசத் திருவிழாவை மகிழ்ச்சியாக கொண்டாடும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் வாழும் தமிழர்கள் அங்கு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயன் என்ற பெயரில் முருகன் கோவில் ஒன்றை கட்டியுள்ளனர். தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயன் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்தும், ஆண்கள் காவடி எடுத்தும் வழிபாடு செய்தனர்.
Hindusthan Samachar / J. Sukumar