Enter your Email Address to subscribe to our newsletters
திருவள்ளூர் 11 பிப்ரவரி (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை தைப்பூச தினம், அரசு விடுமுறை நாள் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவிலில் பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.
கோவிலில் பக்தர்கள் உள்ளே செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதை, காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு பணிகள், கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதி குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக சிறுவாபுரி முருகன் கோவிலில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு வழிபாடு செய்தார்.
Hindusthan Samachar / Raj